அவதேஷ் பிரசாத்
அவதேஷ் பிரசாத் | |
---|---|
உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | லல்லு சிங் |
தொகுதி | பைசாபாத்து |
சட்டமன்ற உறுப்பினர உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 10 மார்ச்சு 2022 – 11 சூன் 2024 | |
முன்னையவர் | பாபா கோரக்நாத், பாஜக |
பின்னவர் | அறிவிக்கப்படவேண்டும் |
தொகுதி | மில்கிபூர் (ப/இ) |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | புதியது |
பின்னவர் | பாபா கோரக்நாத், பாஜக |
தொகுதி | மில்கிபூர் (ப/இ) |
பதவியில் 1993–2012 | |
முன்னையவர் | இராமு பிரியதர்சி, பாஜக |
பின்னவர் | மறுவரையறை |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
பதவியில் 1985–1991 | |
முன்னையவர் | மதோபிரசாத், இதேகா (இ) |
பின்னவர் | இராமு பிரியதர்சி, பாஜக |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | அப் ராஜ், இதேகா |
பின்னவர் | மதோபிரசாத், இதேகா (இ) |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 சூலை 1945 பீகாபூர், ஐக்கிய மாகாணம், இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | பீகாபூர் |
முன்னாள் கல்லூரி | இலக்னோ பல்கலைக்கழகம் (இளநிலைச் சட்டம், 1968) டி. ஏ. வி. கல்லூரி, கான்பூர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (முதுகலை, 1966) |
அவதேஷ் பிரசாத் (Awadhesh Prasad - பிறப்பு: 31 சூலை 1945) ஓர் இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், தேசிய செயற்குழுவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். பிரசாத் 2024ல் மக்களவை உறுப்பினராக[1] தேர்ந்தெடுக்கப்படும் வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]
பிறப்பு
[தொகு]அவதேஷ் 31 சூலை 1945ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின், அயோத்தி மாவட்டத்தின் சுர்வாரில் துக்கி ராம், மைனா தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
குடும்பம்
[தொகு]அவதேஷிற்க்கு சோனாதேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சட்டமன்றத்தில்
[தொகு]பிரசாத் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1977, 1985, 1989, 1993, 1996, 2002, 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கலில் சோஹாவால் (தனி) தொகுதியிலிருந்து ஏழு முறையும், 2012 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மில்கிபூர் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து[3] இரண்டு முறை என ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிசெய்துள்ளார்.
இவர் உத்தரபிரதேச அரசில் ஆறு முறை அமைச்சராகவும், நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[3][2]
மக்களவையில்
[தொகு]2024ல் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு, பாஜகவின் லல்லுசிங்கை 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[4]
சட்டமன்றத் தொகுதி
[தொகு]ஆண்டு | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு விகிதம் (%) | வித்தியாசம் | |
---|---|---|---|---|---|---|---|
1974 | பாரதிய கிரந்தி தளம் | சோகாவால் | தோல்வி | 18,879 | 34.70 | 689 | |
1977 | ஜனதா கட்சி | வெற்றி | 28,090 | 58.42 | 10,578 | ||
1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | தோல்வி | 21,932 | 40.72 | 4,071 | ||
1985 | லோக்தளம் | வெற்றி | 27,373 | 46.29 | 9,147 | ||
1989 | ஜனதா தளம் | வெற்றி | 29,413 | 33.91 | 10,032 | ||
1991 | ஜனதா கட்சி | தோல்வி | 22,047 | 24.90 | 9,643 | ||
1993 | சமாஜ்வாதி கட்சி | வெற்றி | 59,115 | 51.77 | 16,496 | ||
1996 | வெற்றி | 44,399 | 35.17 | 3,407 | |||
2002 | வெற்றி | 43,398 | 35.36 | 8,156 | |||
2007 | வெற்றி | 48,624 | 33.08 | 9,871 | |||
2012 | மில்கிபூர் | வெற்றி | 73,804 | 42.24 | 34,237 | ||
2017 | தோல்வி | 58,684 | 29.77 | 28,276 | |||
2022 | வெற்றி | 103,905 | 47.99 | 13,338 |
மக்களவை
[தொகு]ஆண்டு | கட்சி | சட்டமன்றத் தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்குகள் % | வித்தியாசம் | |
---|---|---|---|---|---|---|---|
1996 | சமாஜ்வாதி கட்சி | அக்பர்பூர் | தோல்வி | 169,046 | 27.12 | 30,749 | |
2024 | பைசாபாத்து | வெற்றி | 554,289 | 48.59 | 47,935 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ayodhya, Kanpur, Gorakhpur and Gonda seats results LIVE updates: SP leads in Ayodhya as BJP's Lallu Singh falls behind". பார்க்கப்பட்ட நாள் 4 Jun 2024.
- ↑ 2.0 2.1 வர்மா, லால்மணி. "அயோத்தியில், நீண்டகால சமாஜ்வாதி கட்சி பிரமுகருக்கு வாய்ப்பு". இந்தியன் என்ஸ்பிரஸ்.
- ↑ 3.0 3.1 Singh, Banbir (31 January 2024). "बार के विधायक, Mulayam के करीबी दलित नेता... कौन हैं Awadhesh Prasad, जिन्हें सपा ने Faizabad से बनाया लोकसभा प्रत्याशी". Aaj Tak.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2454.htm